சுமார் 1000 மில்லியனர்கள் (கோடீஸ்வரர்கள்) ஆராய்ந்த ஒரு ஆய்வு அவர்கள் நாளை எப்படி செலவிடுகிறார்கள், சராசரி மனிதர்கள் எப்படி செலவிடுகிறார்கள் என ஆராய்ந்தது
நாளின் 20 மணிநேரம் இருவருக்கும் பொதுதானாம், உண்பது, உறங்குவது, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், வேலைக்கு போவது என ஒரே மாதிரிதான் 20 மணிநேரங்கள் கழிகின்றன
ஆனால் மற்ற நாலு மணிநேரங்களை அவர்கள் செலவு செய்யும் விதம் தான் அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்குகிறதாம்.
இந்த நாலு மணிநேரத்தில் 1 மணிநேரம் வளர்ச்சிக்கு செலவாகிறதாம். அடுத்து என்ன புராஜக்டுகளில் ஈடுபடுவது என்பது போன்ற திட்டமிடல்களில் அவர்கள் ஈடுபடுகிரார்கள்.
1 மணிநேரம் உடல்பயிற்சியில் கழிகிறதாம். நேரம் இல்லை என எல்லாம் அவர்கள் புகார் சொல்லிகொண்டு உடல்பயிற்சி செய்யாமல் அலுவலகத்தில் இருப்பதில்லை. குண்டாக இருக்கும் ஒரே ஒரு சி.ஈ.ஓ கூட பார்ச்சூன் 500 கம்பனிகளில் கிடையாது.
1 மணிநேரம் தன் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள செலவு செய்கிறார்களாம்...புதியதாக எதாவதை கற்கிறார்களாம். தொழில்சார் திறமைகளை திட்டமிட்டு மேம்படுத்துகிறார்கள்.
அடுத்த 1 மணிநேரம் படித்தல்...கதை புத்தகமோ, முகநூலோ அல்ல..புத்தகங்களை.
வாரன் பஃபட் தினம் ஐநூறு பக்கங்களை படிக்கிறார். அவர் ஒரு நாளின் ஐந்து மணிநேரங்களை படிப்பதில் செலவு செய்கிறார்
மார்க் சுக்கர்பர்க் வாரம் ஒரு நூலை படித்து முடிக்கிறார்
டெஸ்லா உரிமையாளர் இலான் மஸ்க் ஒரு நாளைக்கு இரு நூல்களை படிக்கிறார்...
உடல்
மனம்
திறமை
திட்டமிடல்
இந்த நான்கிற்கும் இவர்கள் தினம் நாலு மணிநேரம் ஒதுக்குகிறார்கள்.
மீதமிருக்கும் 20 மணிநேரங்களில் உலகின் மிகப்பெரும் வணிகநிறுவனங்களை நடத்தி நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கிரார்கள்.
படிக்க, உங்கள் திறமையை மேம்படுத்த, உடல்பயிற்சி செய்ய நேரம் இல்லை என சொல்லவேண்டாம்.
ஆண்டவன் ஒரு சிலருக்கு கை,காலை கூட கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் சமமாக நாளுக்கு 24 மணிநேரத்தை கொடுத்திருக்கிறான்.
அதில் 20 மணிநேரங்களை உங்கள் குடும்பத்துக்காக, முதலாளிக்காக, முகநூலுக்காக, உறக்கத்துக்காக, வண்டுமுருகன் அஜீத் கைப்புள்ள விஜய் சண்டைக்காக செலவு செய்யுங்கள்
மீதமுள்ள நாலுமணிநேரங்களில் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும்.
உண்மை என்னவெனில்:
பணம் வேண்டாம், வளர்ச்சி வேண்டாம், கூடுதலான அறிவு வேண்டாம், உடல்நலம் வேண்டாம் என யாரும் விரும்புவது கிடையாது. இவை எல்லாம் வேண்டும் எனதான் சொல்வார்கள்.
ஆனால் இவற்றுக்காக சிரத்தை எடுக்க மட்டுமே பலரும் தயாராக இருப்பதில்லை.
உழைப்பு என்பது கடினம்..ஆனால் முயன்றால் செய்யமுடியும்
சிரத்தை எடுத்து, திட்டமிட்டு செயல்பட்டு உழைப்பது...அதன் ரேன்ச்ஜ் தனி
ஒவ்வொரு நாளும் உறங்கசெல்லுமுன்:
உங்கள் அறிவு நேற்றை விட மேம்பட்டுள்ளதா?
உங்கள் கெரியரில் ஒரே ஒரு அடி முன்னேற்றத்தையேனும் அன்று அடைந்தீர்களா?
உங்கள் தொழில் திறன் மேம்பட்டுள்ளதா?
உங்கள் உடல்நலன் நேர்றை விட இன்று மேம்பட்டுள்ளதா?
என கேட்டுக்கொண்டு உறஙகச்செல்லுங்கள்
Comments